புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லத்துரை யோகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம் அம்மா காணும் காட்சிகளில் கண் முன்னே நிற்கின்றீர்
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம்
தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய் பாசத்தின் பிறப்பிடமாய் அன்பிற்கு இலக்கணமாய் இருந்த எம் குலவிளக்கே பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள் பல காத்து பத்திரமாய் எமைப் பெற்றெடுத்தவளே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் அன்னயே உனைப்போன்று அன்பு செய்ய யாரும் இல்லையே இவ்வுலகில்.... உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPPAGE ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.