வெளியிட்டவர்
வயது - 86
உடுவெல, ஹந்தானை தோட்டப்பாடசாலை ஆசிரியராகவும், கொடிகாமம் அரசினர் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு மத
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தென்மராட்சிப் பிரிவைச் சேர்ந்த கரம்பகம் என்னும் இடத்தைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் என்னும் இடத்தை இலங்கையில் வதிவிடமாகவும், ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் என்னும் இடத்தைத் தற்போதைய நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் ஆஸ்திரேலியாவில் 05-07-2025 சனிக்கிழமை அன்று இரவு தனது எண்பத்தாறாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இலங்கையில் உடுவெல, ஹந்தானை தோட்டப்பாடசாலை ஆசிரியராகவும், கொடிகாமம் அரசினர் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த பின்பு மெல்பேர்ண் மணி என்ற புனைபெயரில் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை , முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
நாவற்காடு , வரணி சிதம்பரம்பிள்ளை , அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முன்னாள் கிராமசேவையாளர் (கொடிகாமம், மீசாலை வடக்கு, கச்சாய் கிராமசேவையாளர் பிரிவுகள்), சிதம்பரப்பிள்ளை அம்பலவாணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராஜா, காலஞ்சென்ற இராசரத்தினம்; காலஞ்சென்ற செல்லத்தங்கம், காலஞ்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இராஜலக்ஸ்மி, சேதுப்பிள்ளை, காலஞ்சென்ற காசிநாதர், காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் மைத்துனியும்,
இரமேஸ் (பொறியியலாளர், ஆஸ்திரேலியா), அகணி சுரேஸ் (பொறியியலாளர், எழுத்தாளர், கனடா), இரமா(சங்கீத ஆசிரியை, ஆஸ்திரேலியா), பிரேமா (மருத்துவ தாதி, ஆஸ்திரேலியா), பேராசிரியர் தாஸ் நிர்மலதாஸ் (மெல்பேர்ண் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ராஜேஸ்வரி(ஆஸ்திரேலியா) , ஜீவநந்தினி(கனடா), சிவராஜா(ஆஸ்திரேலியா), சற்குணம் (ஆஸ்திரேலியா), கீதா(ஆஸ்திரேலியா), ரஜனி(பிரான்ஸ்), பபிந்திரா (ஆஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
ஸ்ரீரங்கன் (பிரான்ஸ்), மோகனராஜா (ஆஸ்திரேலியா) இன் சிறியதாயாரும், சாயிலவன், சயனிகா, கிரிசன், காலஞ்சென்ற பைரவி, நந்தேஸ், காலஞ்சென்ற ஜனனி, ஜீவினி, அனிக்கா, அபிசா, சாரங்கன், பைரவி, பிரியங்கன், அலெக்ஸ், ஸ் ரீவன், சகானா, சுருதி, நீல், சாயிசூரியா, சாயித்திரேன், குணராஜ், கோபிராஜ் ஆகியோரின் பேத்தியாரும், ஆத்யா, ஆரியன் ஆகியோரின் பூட்டியாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை Rippage ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
நிமலதாஸ் (மகன்)
றாமா (மகள்)
எங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டீர்கள் , ஆனால் எங்கள் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறைந்ததில்லை...
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.