வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 90
பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் இராஜலிங்கம் ஜெயதா (லலிதா) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி
மாதம் ஒன்றோ போனதம்மா – உன்னை
காண மனம் வாடுதம்மா !
தொலைதூரம் நீ சென்றாலும் – அம்மா
தொடர வேண்டும் உன் அன்பு என்றும்!
தவிக்குதம்மா எம் இதயம் – நம்
தாகம் தீர்க்க வாருவாயோ?
தெகிட்டாத உன் முத்தம் – இங்கு
தினம்தோறும் கேட்கும் நித்தம்!
கண்ணீரோ உருகுதம்மா நம் விழியில்
உன்னை இனி மீண்டும் எங்கு
காண்பதுவோ நம் வழியில்.
அம்மா உன் வருகைக்காக
கொந்தளிக்கும் நம் நெஞ்சம்!
உன் புகைப்படம் ஒன்றே இங்கு
நமக்கு தஞ்சம் என்றும்!
கண்ணீரில் தவிக்கின்றோம் – ஒருமுறை
கண்ணெதிரே வராயோ?
காலன் உன் கை பிடித்து
எங்கு கூட்டி சென்றானோ?
உன் ஆத்மா சாந்தி அடைய ஆயுள்
முழுதும் மண்டியிடுவோம்
மீண்டும் ஓர் மறுபிறவி வேண்டி நிற்போம்
உன் மடியில்!
சாந்தி. சாந்தி!! சாந்தி.!!
அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 12 -12 -2025 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் தும்பளை முத்துமாரி அம்மன் ஆலய அந்தியேட்டிகிரியை மடத்தில் நடைபெறும். தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும், கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPPAGE ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.