வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 80
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பை பிறப்பிடமாகவும், தொண்டமனாறு சின்னமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி - குண்டுமணி தங்கம் தம்பதியினரின் மருமகளும்,
திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சேந்தன், ஸ்கந்தன், மேகலா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஜெயந்திமதி, ரேவதி, ஜெயவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகசிகாமணி, சண்முகசிகாமணி மற்றும் நகுலசிகாமணி, வனிதாமணி,
காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிகாமணி, ரூபமணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காந்திமதி, கிருஷ்ணசர்மா, சம்பந்தமூர்த்தி மற்றும் ரதிசேனா (பொன்மணி) ஆகியோரின் மைத்துனியும்,
மாதுமை, தெய்வீகன், காவியா, வித்தகன், வக்ஷிகன், அஸ்வினி, அக்கிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் காட்டுபுலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPpage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :குடும்பத்தினர்
.
ஜெயவிந்தன் (மருமகன்)



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.